Wednesday, January 6, 2010

சாலிகிராமம் to வேளச்சேரி

நம்மளும் தமிழ்ல ஒரு பதிவு போடனும்னு ரொம்ப நாளா யோசனை பண்ணிகிட்டே இருந்தேன்...(யோசனையோட சரி)

இன்னிக்கு எதையாவது எழுதிடனும்னு பேனாவை எடுத்தேன். sorry, keyboard-அ எடுத்தேன்.

என்ன எழுதுறதுன்ற யோசனைலயே ஒரு மணி நேரம் ஓடி போச்சு...

வேளச்சேரில இருக்க ஒரு apartment க்கு ஒரு பத்து நாள் முன்ன வீடு மாத்தினேன் அத பத்தி எழுதினா என்ன?

ஆறு மாச சாலிகிராம வாசம் டிசம்பர் 25 முடிஞ்சு போச்சு...
நாலு வீடு தள்ளி இருந்த ரம்பா கிட்ட சொல்லாம கிளம்பினது கொஞ்சம் வருத்தமா இருந்தது.
Just dial, Sulekha ல பொறுக்கி எடுத்து ஒரு டிராவல்ஸ் கம்பெனில கூப்பிட்டா, கொஞ்ச நேரத்துல வண்டியோட டிரைவர் வந்து வீட்டு வாசல்ல நின்னார்... வெள்ளிக்கிழமை வீடு காலி பண்ண கூடாதுன்னு கண்டிஷன் போட்ட வீட்டுகாரரை...?! அப்படியானு கேட்டுகிட்டே காலி பண்ணி முடிச்சோம். அப்பா, அம்மா அப்புறம் என்னோட பத்தினி எல்லோரும் ஒரு வாரம் கஷ்டப்பட்டு எல்லா things-யும் கட்டி வச்சிருந்ததால, சனிக்கிழமை காலி பண்ண வச்சிருந்த ப்ளானை கடைசி நேரத்தில வெள்ளிக்கிழமைக்கு மாத்தினோம்.

Bachelor life-ல கூட இருந்த நண்பர்கள் உதவியோட ஒரு வழியா பெரிய வேன்ல எல்லா things-ம் ஏத்தி முடிச்சோம்.
அம்மாவையும், என் மனைவியையும் மட்டும் வீட்டில விட்டுட்டு வேன்ல முன் சீட்ல அப்பாவும் தம்பியும், பின்னாடி ரெண்டு நண்பர்கள்னு சாலிகிராமத்துக்கு டாடா சொல்லிகிட்டு வண்டி கிளம்பவும், நான் பின்னாடியே தங்கச்சிய கூட்டிட்டு பைக்ல கிளம்பி வேனை க்ராஸ் பண்ணி முன்னால வேளச்சேரில ஒரு apartment-ல நான் பாத்திருந்த வீட்டுக்கு வந்து சேந்தோம்...

அப்பாடா................ வந்திட்டோம்

சுமார் 1கிலோ எடையோட இருந்த வீட்டு சாவி கொத்துல வாசல் கதவுக்கான சாவிய கண்டுபிடிச்சு கதவை திறந்தேன். நேரம் இரவு 7 இருக்கும். லைட் போடலாம்னு சுவிட்ச தட்டுனேன். எந்த சுவிட்சுனு தெரியாததால எல்லா சுவிட்சயும் போட்டேன். எல்லா பல்பும் அமைதியா இருந்துச்சு. Mobile-ல இருந்த torch எடுத்து மறுபடி அலசும் போது டக்குனு கண்ணுல பட்டுச்சு, அட !!!மெயின் போர்டு. ஏதோ கண்டுபிடிச்ச சந்தோஷத்தோட மெயின் சுவிட்ச ஏத்தி விட்டேன். அய்யோ??? அப்பவும் எரியல. என்னடா இது வந்த உடனே வம்பா போச்சுனு சுத்தி சுத்தி வந்தேன். கூட வந்த நண்பன் "வெளில ஏதாவது மெயின் பாக்ஸ்" சொல்லி முடிக்கும் முன் கண்டுபிடித்து on பண்ண உடனே வீட்ல எல்லா லைட்டும் எரிஞ்சது. யுரேகா! யுரேகா! னு கத்தனும் போல இருந்திச்சு.

வாட்ச்மேனை கூட்டிட்டு வந்து வீட்டுக்கு பக்கத்துல இருக்க wicket door-அ திறந்து வேனுக்காக காத்துகிட்டு இருக்கும் போது யாரோ நம்ம வீட்டுக்குள்ள போற மாதிரி தெரிஞ்சது. பதறியடிச்சு போய் யாருன்னு பாத்தா, ஒரு 5 பேரு. 5 பேருக்கும் சேத்து மொத்தமே 20 வயச தாண்டாது. அந்த க்ரூப்ல லீடர் மாதிரி தெரிஞ்ச ஒன்னு "Uncle are you going to stay in this house?"-னு ஒரு தோரனையோட கேட்டுச்சு. அது பேசுன english மொதல்ல புரியல (மத்தவுங்க பேசுறது மட்டும் புரியிற மாதிரி). அதே குட்டி பொண்ணு மறுபடி அதே கேள்விய கேட்டது. நானும் தர்மதுரை ரஜினி மாதிரி "yes yes"-னு தலைய ஆட்டினேன். இன்னொரு பொடுசு ஏதோ கேக்க ஆரம்பிக்க - நான் உன்னை மாதிரி இருக்கும் போது "அ, ஆ" தவிர எதுவும் சொன்னதில்லை, இதெல்லாம் ரொம்ப ஓவர்னு சொன்னேன். "This uncle" அப்படின்னு ஏதோ சொல்லிகிட்டே ஓடிட்டாங்க(நிச்சயமா அப்போ ஏதாவது திட்டி இருப்பாங்க)... அப்புறம் வேன் வந்து எல்லா luggage இறக்கி முடிச்சோம். அப்புறம் தம்பி கூட மறுபடி காரில் சாலிகிராம பயணம்(அம்மாவையும், மனைவியையும் கூட்டி வர).

சனிக்கிழமை அத விட கொஞ்சம் பெரிய க்ரூப் ஒன்னு வீட்டை முற்றுகை இட்டது. கொஞ்சம் பயத்தோட என்னனு விசாரிச்சேன். "Uncle, We are a children" அப்புறம் ஏதோ சொல்லிகிட்டே ஒரு பிரிண்ட் அவுட் எடுத்த பேப்பரை என் கையில திணிச்சாங்க. அதில ஒரு ரெண்டு பாரா english. சாராம்சம் இது தான்: "apartment குழந்தைகள் எல்லாரும் சேர்ந்து குடியரசு தின விழா கொண்டாட போறோம், முடிஞ்சா ஏதாவது உதவி செய்ங்க". நான் ஒரு 100ரூபாய் குடுத்தேன். Thanks சொல்லிட்டு எல்லாரும் காணாம் போயிட்டாங்க.
நான் யோசிச்சு பாத்தேன். சின்ன வயசுல ஒரு மாசம் முன்னாடி யோசிச்ச ஒரே விஷயம் "தீபாவளி". இந்த குழந்தைங்க மட்டும் எப்படி குடியரசு தின விழா கொண்டாடுறத பத்தி யோசிக்கிறாங்க? (எனக்குள் பல முறை கேட்டு கொண்டேன்)

அப்ப முடிவு பண்ணேன், மொதல்ல அந்த குழந்தைங்கள Friend பிடிக்கணும்.

இப்பவும் நான் மொதல்ல பாத்த குட்டி க்ரூப்போட தினமும் எதாவது பேசாட்டி தூக்கம் வரதில்லை.

ஒரு வழியா நான் வேளச்சேரி வாசி ஆகிட்டேன்.

குறிப்பு: நானும் தமிழ்ல பதிவு போட்டுட்டேன்...
நாங்களும் ரௌடி தானுங்க... :)

10 comments:

Sathyan said...

அருமையான பதிவு தமிழ் ல!!!
ஏரியா விட்டு ஏரியா மாறியதை அழகாய் எழுதி இருக்கிறாய் !!!
மென் மேலும் தமிழில் பல பதிவுகள் வெளியிட வாழ்துக்கள் !!

(அப்பாடா 3 வரி தமிழ்ல டைப் பண்றதுக்குள்ள மூச்சு வாங்குது ... எப்டி ப்ளாக் எல்லாம் அடிகிறீங்கலோ !! :) )

Amudhan said...

ரியல்லி னைச். இட் வாஸ் ரியல்லி குட் டு டூ ரீட் எ தமிழ் போஸ்ட். eppudi? naangalum thamaizhla comment ezhudhunooma illaiyaa? Oh... wait... did I make a mistake here? ;)

Dobby Severus Salazar said...

Felt like reading a nice article in Aananda Vikatan... :)

மருது பாண்டி said...

ITS VERY NICE

செல்வமுரளி said...

இன்னாபா , இம்மா சூப்பரா எழுதினுகீர...
ஜோரகீதுப்பா :)

Podipayyan said...

Epponna Veedu Maathuneenga......

Sollavey Illa...

Puthu Veetu Payaasam Illa....

Oru Virunthu Illa..

oru Party Illa...

Enna Kodummannaaaaa...

Unknown said...

good try

About Me said...

Nalla Mokka Ohm........
Continue writing more mokkai

Athimoolam said...

உங்கள் சாலிகிராமம் டு வேளச்சேரி கதை மிகவும் அற்புதம் . இதில் நகை
சுவை , நட்பு , செண்டிமெண்ட் , நாட்டு பற்று எல்லாம் சூப்பர் . நிங்க கதை எழுத நல்ல தகுதி ஆனவர்

Unknown said...

Really good, Athula oru vari rombavum pidichathu. Unga vayasula A, AA than sonnaen. Its truth..... Maen maelum valara vazthukkal....